Pages

Wednesday, 20 February 2013




  • பாரதியார் தமிழ் கவிதை உலகில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவரின் கவிதைகளைப் படிப்பது இன்பம். கட்டுரைகளில் பாராதியாரின் கவிதைகளை மேற்கோளாக் காட்டுவது அதிக மதிப்பெண்களைப் பெற வழி வகுக்கும். 
மகாகவி பாரதியார்.


அ. நாட்டு வணக்கம் 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே / அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள்  வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே......
                                                  இக்கவிதையை நாம் நாட்டுப் பற்றிய கட்டுரைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். 


ஆ. அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
                                                             இக்கவிதையை உள்ள உறுதி வேண்டும் என்ற இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

இ.மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இடினமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கி பொருள் கைப்பட வேண்டும்
                                                                             இக்கவிதையை மன உறுதிக்கும், இனிய சொற்களைப் பேச வேண்டும் என்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 




No comments:

Post a Comment